50 சதவீத மானியத்துடன் உரம் விற்பனை

விழுப்புரத்தில் 50 சதவீத மானியத்துடன் உரம் விற்பனை செய்யப்படுவதை விவசாயிகள் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரி கூறியுள்ளார்.

Update: 2024-06-16 04:36 GMT

விழுப்புரத்தில் 50 சதவீத மானியத்துடன் உரம் விற்பனை செய்யப்படுவதை விவசாயிகள் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரி கூறியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டத்தில் 12,500 ஏக்கரில் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக வேளாண்துறை தெரிவித்தது.இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டில் முதல்வரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ், நெல் சாகுபடி செய்யும் வயலின் மண் வளத்தை மேம்படுத்த 12,500 ஏக்கரில் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

உற்பத்தி அதிகரிப்புக்கென தொடா்ச்சியாக அதிகளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதால், மண்ணிலுள்ள நுண்ணுயிா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. இதனால் மண்ணின் உற்பத்தி திறனும் குறைகிறது. எனவே, மண்ணின் வளத்தை காத்து மக்களைக் காக்கும் விதமாக, ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.இந்தத் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதைகள் (தக்கைப்பூண்டு) விநியோகம் செய்யப்படவுள்ளது.

விவசாயிகளை பசுந்தாள் உரவிதைகள் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் உரப்பயிா்களின் வோ்முடிச்சுகளிலுள்ள பாக்டீரியாக்களில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, மண்ணில் நிலைநிறுத்துவதால் யூரியா போன்ற செயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைக்கலாம்.இந்தத் திட்டத்தின் கீழ், ஆயக்கட்டு, இறவை பாசனப் பகுதிகளில் பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்வதற்காக, வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கப்படவுள்ளன.எனவே, விவசாயிகள் உழவா் செயலியில் பதிவு செய்து, இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News