வாரச்சந்தையில் பச்சை பட்டாணி விற்பனை - அதிகாரிகள் நடவடிக்கை
வாரச்சந்தையில் சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்;
Update: 2024-07-04 09:27 GMT
வியாபாரிகள் விற்பனை
சிவகங்கை வாரச்சந்தையில் சாலையோரம் கடைகள் அமைத்து காய்கறி, உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விற்கப்பட்ட பச்சை பட்டாணி பச்சை சாயம் பூசியிருப்பதை மக்கள் கண்டறிந்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் செய்தனர். சிவகங்கை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வாரச்சந்தையில் பச்சை பட்டாணி விற்பனை செய்த கடைகளில் சோதனை செய்தனர். பச்சை பட்டாணியை வாங்கி தண்ணீரில் போட்டதும் சாயம் வெளியேறியது. அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பட்டாணியை விற்பனை செய்த மூவருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து, 40 கிலோ பட்டாணியை பறிமுதல் செய்தனர்.