சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை

ஐடீல் அட்ஸ் அண்டு ஈவெண்ட்ஸ் சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது என தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-12 06:13 GMT

சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை

ஐடீல் அட்ஸ் அண்டு ஈவெண்ட்ஸ் சார்பில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சேலம் 5 ரோடு அருகே உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மன், வியட்னாம் என பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமான பர்னிச்சர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் கூடுதல் அம்சமாக முன்னணி கார் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளுடன் அதிரடி தள்ளுபடி விற்பனையை மேற்கொண்டுள்ளது. ரூ.500 மதிப்பிலான மளிகை பொருட்களை சிறப்பு சலுகையாக வெறும் ரூ.250-க்கு பெற்று செல்லலாம். இந்த கண்காட்சியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் வந்து பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கண்காட்சி இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம் ஆகும்.
Tags:    

Similar News