அத்துமீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு அபராதம்

திருச்செங்கோட்டில் அத்துமீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-02-23 01:58 GMT

 திருச்செங்கோட்டில் அத்துமீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது பயன்படுத்துவது குறித்து துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் ஒரு 500 கிலோ அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டது 10 கடைகளுக்கு தல 2000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூபாய் ஐம்பதாயிரம் ஆகும் என துப்பரவு அலுவலர் வெங்கடாஜலம் கூறினார்
Tags:    

Similar News