தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு சீல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 37 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-06-27 04:56 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்த 37 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 22-ந் தேதி புதூர் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தோம். அப்போது விளாத்திகுளம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அந்தக் கடை மூடி சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மே 1-ந் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் போலீஸ் துறையினரின் கூட்டாய்வில், தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்ததாக 37 கடைகள் கண்டறியப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்டன. அதில், 21 கடைகளுக்கு ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதித்து, 14 முதல் 30 நாட்களுக்கு பின்னர் திறந்துவிடப்பட்டன.  மீதமுள்ள 16 கடைகள் சீலிடப்பட்ட நிலையில் தொடர்கின்றன. விசாரணை நிறைவுற்ற பின்னர், அபராதம் விதித்து, சம்பந்தப்பட்ட வணிகர்கள் அந்த தொகையினை செலுத்திய பின்னர், அந்த கடைகள் திறந்துவிடப்படும். ஒரு பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தாலும் கடை மூடி சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News