இருசக்கர வாகனம் மீது கார்மோதி விபத்தில் பள்ளி மாணவி படுகாயம்!
சாலையை கடக்க முயன்ற இருக்ககர வாகனம் மீது கார் மோதி விபத்து மாணவி உட்பட இருவர் படுகாயம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் இவரது மகள் ஸ்ரீமதி (14). இவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் அரசு வழங்கும் உதவித்தொகைக்காக புதிய கணக்கு தொடங்குவதற்காக மாணவி ஸ்ரீமதி தனது வீட்டில் இருந்து அவரது தந்தை சிவக்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது சாலையை கடக்க முயன்றபோது ராசிபுரத்தில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்ற கார் இரு சக்கர வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளனது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி ஸ்ரீமதி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. அவர்ளுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள மாணவி ஸ்ரீமதி மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.