சேலம் மாநகராட்சி 6-வது வார்டு கமிட்டி கூட்டம்

Update: 2023-12-11 07:05 GMT

பகுதி சபை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாநகராட்சி 6-வது வார்டு கமிட்டி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 6-வது வார்டு என்.ஜி.ஜி.ஓ. காலனி நடுநிலைப்பள்ளியில் 6-வது வார்டு கவுன்சிலரும், மேயருமான ராமச்சந்திரன் தலைமையில் நேற்று பகுதி சபை மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசுகையில், 6-வது வார்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மற்றும் வடிகால் பணிகளும், கோரிமேடு முதல் பெரிய கொல்லப்பட்டி வரை ரூ.82 லட்சம் மதிப்பில் குடிநீர் மெயின் குழாய் அமைக்கும் பணியும், பெரியார் நகர் கரடு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கீழ்நிலைத்தொட்டி அமைக்கும் பணியும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கான்கிரீட் சாலை மற்றும் தார்சாலை, ஆரம்ப சுகாதார நிலையம், சின்னக்கொல்லப்பட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மேயர் ராமச்சந்திரன் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து 42 விண்ணப்பங்களை பெற்றார். பின்னர் அந்த குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News