மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு !
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 31 கன அடியாக குறைவு.
By : King 24x7 Angel
Update: 2024-03-01 06:43 GMT
சேலம் மாவட்டம்.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 31 கன அடியாக குறைந்துள்ளது .காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து கொண்டு வருகிறது. நேற்று நீர் வரத்து வினாடிக்கு 77 கன அடியிலிருந்து இன்று 31 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 63.92 அடியாகவும், நீர் இருப்பு 27.69 டி.எம்.சி.யாகவும் உள்ளது.குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.