சேலத்தில் பூக்கள் விலை குறைந்தது

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை குறைந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.

Update: 2024-07-02 09:04 GMT

பைல் படம் 

சேலம் மாவட்டத்தில் வீராணம், பனமரத்துப்பட்டி உள்பட பல இடங்களில் குண்டுமல்லி, சன்னமல்லி, அரளி என பல வகையான பூக்கள் சாகுபடி நடக்கிறது. மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பூத்திடும் பூக்களை சேலம் கடைவீதி பகுதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை கிலோ ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும்.

தற்போது சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை உள்ளிட்டவை இல்லாததும், பூக்களின் வரத்து அதிகரிப்பு காரணமாகவும் பூக்கள் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், கடந்த 29-ந் தேதி கிலோ ரூ.500-க்கு விற்ற குண்டுமல்லி, நேற்று கிலோ ரூ.300-க்கும், கடந்த 29-ந் தேதி 200-க்கு விற்ற முல்லைப்பூ நேற்று ரூ.120-க்கும் விலை குறைந்தன. இதே போல் மற்ற பூக்களின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. காக்கட்டான் ரூ.100-க்கும், கலர் காக்கட்டான் ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், சாதா சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.40-க்கும், மஞ்சள் அரளி, செவ்வரளி ஆகியவை தலா ரூ.120-க்கும், நந்தியாவட்டம் ரூ.20, சி.நந்திவட்டம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News