காகிதத்தில் உருவங்கள் செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் திறனை ஊக்குவிக்க நடைபெற்ற சிறப்பு பயிற்சி

Update: 2024-02-15 18:00 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே  அரசு பள்ளி மாணவர்களுக்கு காகிதத்தில் உருவங்கள் செய்வது குறித்த பயிற்ச்கள் அளிக்கப்பட்டது. 

தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தீரன் சின்னமலை கலாச்சார மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு காகிதத்தில் பல்வேறு உருவங்கள் செய்வது குறித்த பயிற்சி பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமையாசிரியை வசந்தாள் தலைமை நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட கருத்தாளர் பாண்டியன், காகிதத்தில் பல்வேறு வகையான தொப்பிகள், பந்து, பறவை உள்ளிட்டவற்றின் மாதிரிகளை செய்தல் மேலும் வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை காகிதத்தில் செய்வது குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார்.

இதில் பயிற்சி பெற்று காகிதத்தில் பொருள்கள் செய்த மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை பரிசளித்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் இ.ரா.முருகன்,சித்ரா, சீனிவாசன், ரமாமகேஸ்வரி, அனிதா தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைச் செயலாளர் ரேகா, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News