சேலம் சிறையில் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் ஆய்வு
சேலம் சிறையில் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.;
Update: 2024-03-26 02:21 GMT
அணிவகுப்பு மரியாதை
கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், நேற்று சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முன்னதாக சிறைக்காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை டி.ஐ.ஜி. ஏற்றுக்கொண்டார். பின்னர் அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறைக்காவலர்களை பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை துணை அலுவலர் சிவா ஆகியோர் செய்திருந்தனர்.