சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் தலைமையில் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-22 07:36 GMT

அதிமுக 

சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் எடப்பாடியில் நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தனிக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஓமலூர் திண்டமங்கலத்தைச் சேர்ந்த கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் விக்னேஷை சேலம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளராக கட்சி தலைமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ள கவுண்டனூர் தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் தலைமையில் நடைபெற்றது சங்ககிரி மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் எடப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் துரை என்கின்ற மாதேஸ்வரன் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி பூலாம்பட்டி பேரூராட்சி செயலாளர் ஜெயராமன் மற்றும் உள்ளாட்சி பிரதநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News