சேலம் ரயில்வே கூட்செட் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் ஜங்ஷன் ரயில்வே கூட் ஷெட்டில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Update: 2024-02-14 08:05 GMT
சேலம் ரயில்வே குட் ஷெட்டில் கீழ் இறங்கியுள்ள ரயில் தண்டவாளத்தை சரி செய்து கொடுக்க வலியுறுத்தி சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தினர் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்களில் இருந்து லோடுகளை இறக்குவதற்கு வசதியாக லாரிகளை வேகன்களோடு ஒட்டி நிறுத்த வசதியாக தண்டவாளங்களை சரி செய்ய செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.