சேலம்: அரிசி வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

சேலத்தில் அரிசி வியாபாரி வீட்டில்10½ பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2024-05-26 07:17 GMT

பைல் படம் 

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 32). அாிசி வியாபாரியான இவர் திருச்சி மெயின் ரோட்டில் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ந் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது பூஜை அலமாரியில் இருந்த 10½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டு கதவின் பூட்டை உடைக்காமல் மர்மநபர்கள் கள்ளச்சாவி போட்டு திறந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News