சேலம் கிழக்கு மாவட்ட த.மா.க தலைவர் காளிமுத்து அதிமுகவில் ஐக்கியம் !
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் த.மா.க தலைவர் காளிமுத்து அதிமுகவில் இணைந்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-28 10:27 GMT
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவரும், ஆத்தூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான டி. காளிமுத்து மற்றும் கல்பகனூர் ஊராட்சிமன்ற தலைவர் ராஜாத்தி காளிமுத்து ஆகியோர் இன்றைய தினம் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுடன் நரசிங்கபுரம் 18 வது வார்டு பகுதியைச் சேர்ந்த நூருமுகமது, சந்தோஷ், கோபிநாத், ரியாஸ், ராகுல், செல்லப்பன், சிலம்பரசன், மணிவேல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் அதிமுகவில் இணைந்தனர். புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.