பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை கொண்டாடிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
பாஜக கூட்டணியை த.மா.கா. கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Update: 2024-02-26 18:11 GMT
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனை வரவேற்று சேலம் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் அம்மாப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் உலக நம்பி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் மாநில இணைச் செயலாளர் சின்னதுரை, பொதுச் செயலாளர் விஷ்ணுகுமார், எல்.ஐ.சி. பழனிவேல், தாதம்பட்டியார், மகளிரணி பாம்பே தனம், இளைஞரணி சாலமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.