2 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்ட சேலம் ரயில்: பயணிகள் அவதி
திருச்சியிலிருந்து சேலம் புறப்பட்ட பயணிகள் ரயிலில் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக 2 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டது.
Update: 2024-02-19 04:25 GMT
திருச்சியிலிருந்து சேலம் புறப்பட்ட பயணிகள் ரயிலில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் அந்த ரயில் 2 மணி நேரம் நின்று தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மயிலாடுதுறையிலிருந்து சேலத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா் 9.45க்கு புறப்பட்டு கோட்டை ரயில் நிலையத்தை அடைந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரயிலை இயக்க முடியவில்லை. தகவலறிந்து வந்த பொன்மலை பணிமனை தொழில்நுட்ப பிரிவினா் முயன்றும் சீராக்க முடியவில்லை.. இதையடுத்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அதன்முலம் ரயில் சுமாா் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.