நல்லம்பள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2024-06-18 04:25 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருகிறது. இன்று காலை 6:00 மணிக்குக் கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். தரம் மற்றும் ரகத்திற்கு தகுந்தாற்போன்று 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 17,000 ரூபாயில் வரை ஆடுகள் விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 40 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News