திண்டுக்கல்லில் சாலமன் பாப்பையாவின் சிறப்பு பட்டிமன்றம்
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-22 12:03 GMT
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக சாலமன் பாப்பையா பங்கேற்றுப் பேசியதாவது: தாய்மொழியான தமிழைக் கற்றுக் கொள்வதற்குத் தமிழர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாய்மொழியில் கற்பதன் மூலம்தான் அறிவும், சிந்தனையும் பெருகும். எத்தனையோ தடைகளைக் கடந்துதான் நமது முன்னோர்கள் தமிழைப் பாதுகாத்துப் பரப்பி வந்துள்ளனர்.
தமிழ் அறிவின் மொழி, ஞானத்தின் மொழி. எல்லாச் சமயங்களின் ஞானமும் தமிழில்தான் உள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.