தஞ்சாவூர் மாவட்டத்தில் சமத்துவப் பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-01-13 09:35 GMT
கல்லூரி பொங்கல் விழா

தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா. விஜயா, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ப.சுப்ரமணியன் வாழ்த்திப் பேசினர். இவ்விழாவில், தமிழ்நாடு அரசு சிறப்பு டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக, மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் வரவேற்றார்.

நிறைவாக, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் வ.நதியா நன்றி கூறினார். விழாவின் நிறைவாக அனைத்துத்துறைச் சார்ந்த பேராசிரிய பெருமக்கள், மாணவர்கள், பொங்கல் வைத்து கதிரவனுக்கு வழிபாடு செய்து கலைவிழா நிகழ்த்தினர். சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம், ஏறு தழுவுதல், கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மருதுபாண்டியர் கல்லூரி மேலாளர் இரா.கண்ணன், செய்திருந்தார்.

செருவாவிடுதி பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் பொன்.அறிவானந்தம், எம்.தீபா, பி.பொன்மணி மேகலை, ஆர்.ரஞ்சித், சதீஷ்குமார், நந்தகுமார், வேம்பிரித்திகா, கிருஷ்ண பாரதி, தேன்மொழி, கலைச்செல்வி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர் நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News