நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கல்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் சமத்துவ பொங்கலை கொண்டாடினர்;
சமத்துவ பொங்கல்
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் வேலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் மாட்டுப்பொங்கல் சமத்துவ பொங்கல் நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு சி ஹெச் பி காலனி பகுதியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் 3 பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வந்தவுடன் பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் அனைவருக்கும் பொங்கல் வழங்கினார், சமூக வலைதலை அணி பெண்கள் பொங்கலினை வைத்தனர்,நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திமுக நகரச் செயலாளர் கார்த்திகேயன் ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாநில சமூக வலைதள அணி பொறுப்பாளர் திருநங்கை ரியா, தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் நாமக்கல் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர், மணியம் மாவட்ட விவசாய தொழிலாளர் அமைப்பாளர் கந்தசாமி, விவசாய அணி தலைவர் முருகன், இலக்கிய அணி அமைப்பாளர் ராஜசேகர், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்சாமி, தகவல் தொழில்நுட்பபிரிவு, ஆயலக அணி, மாணவரணி இளைஞர் அணி அமைப்பாளர்கள்,இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாட்டுப் பொங்கலை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்