பாலாற்றில் மணல் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஆம்பூர் அருகே பெரியவரிகம் சோமலாபுரம் செல்லும் பாலாற்றில் அதிகாரிகளின் துணையோடு நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-06-26 02:34 GMT
மணல் அள்ளப்பட்ட இடங்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் சோமலாபுரம் செல்லும் பாலாற்றில் கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் காவல் துறை உதவியுடன் இரவு நேரத்தில் மணல் கொள்ளை அமோகமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். வருவாய்த்துறை சில அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக உதவியாளர் மூலமும், காவல்துறை அதிகாரிகளுக்கு சில காவலர்கள் மூலமும் மாத மாதம் பட்டியல் போட்டு வசூல் வேட்டை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். துறை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்