செம்மண் கடத்தியவர் கைது - லாரி, பொக்லைன் பறிமுதல்

கெங்கவல்லி அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்பட்ட லாரி மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-08 05:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 

கெங்கவல்லி: கெங்கவல்லி சுற்று வட்டாரத் தில், இரவு நேரங்களில் அரசு அனுமதி விவசாய தோட்டத்தில் இருந்து செம்மண கடத்தி, செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்வதாக ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை கடம்பூர் பகுதியில் போலீசார் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.

அதில், செம்மண் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. உரிய ஆவணம் இல்லாததால் டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பொக்லைன் உரிமையாளர் பிரபு (28), டிப்பர் லாரி உரிமையா ளர் செந்தில்குமார் (44), தண் ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29), கிரி (27) ஆகிய 4 பேர் மீது கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரபு (28) என்பவரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய செந்தில்குமார், சுரேஷ், கிரி ஆகியோரை போலீ சார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News