மணல் கடத்தியவர் கைது: டெம்போ பறிமுதல்!
ரோந்து பணியின் போது டெம்போவில் மணல் கடத்திய ஒருவரை கைது செய்த போலீசார் - மற்றொருவருக்கு வலை;
Update: 2024-03-31 17:31 GMT
காவல்துறை விசாரணை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேறியை அடுத்த அன்னங்குடி-லத்தேரி சாலையில் லத்தேரி போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் முருகானந்தம், கன்னியப்பன் மகன் கணில் ஆகியோர் பாலாற்றில் இருந்து ஒரு டெம்போவில் மணலை ஏற்றி கடத்தி வந்தனர். அவர்களை போலீசார் மடக்கியபோது, கணில் தப்பியோடி விட்டார். முருகானந்தம் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தல் மணலுடன் டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய கணிலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.