ஆரணி அருகே முரம்பு மண் கடத்தல்

ஆரணி அருகே முரம்பு மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2024-06-28 15:13 GMT

மண் கடத்தல் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆகாரம் ஊராட்சி ஏரியில் டிராக்டர்கள் மூலம் முரம்பு மண் கடத்தப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் ஆய்வாளர் சுந்தரேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர் .

அப்போது 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் கடத்திக் கொண்டிருந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News