செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
Update: 2023-12-01 10:18 GMT
செல்வ விநாயகர்
சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம், விநாயகருக்கு பால், தயிர், இளநீர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் முரளி செய்துவைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஞானவேல், எழிலரசி செய்திருந்தனர்.