சங்ககிரி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சங்ககிரியில் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-03-28 16:39 GMT

தீ மிதிக்கும் பக்தர்கள்

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட நல்லங்கியூர் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது.இதனையடுத்து பக்தர்கள் இன்று காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தில் முதலில் பூசாரி தீ மிதித்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் எலுமிச்சை அழகு, வாய்ப்பூட்டு அழகு குத்திக்கொண்டு தீமிதித்தனர்‌.இதில் 60 அடி நீளம் கொண்ட ஒரு அழகுகில் இருவர் குத்திக்கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதன் பின்னர் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

Similar News