பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம் - பொதுமக்கள் அவதி !
வேலுார் கிராமத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார வளாகம் சேதமடைந்தது. இதனால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த கிராமத்தினர் விருப்பம் காட்டவில்லை.
By : King 24x7 Angel
Update: 2024-03-26 08:33 GMT
செய்யூர் அருகே சீக்கனாங்குப்பம் ஊராட்சியில், 1, 000த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தினர் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, வேலுார் கிராமத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதார வளாகம் சேதமடைந்தது. இதனால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த கிராமத்தினர் விருப்பம் காட்டவில்லை. தற்போது, அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.