தேங்கும் குப்பையால் சுகாதாரக்கேடு
Update: 2023-12-20 10:56 GMT
திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகளில் குப்பை அள்ளும் பணியில் தோய்வு ஏற்பட்டு ஆங்காங்கே குப்பை குவிந்து வருவதால் சுகாதாரக்கேடு உருவாகி வருகிறது.ஊராட்சிகளில் தெருவோரங்களில் மட்டுமின்றி ரோடு, புதர்கள், ஒதுக்குப்புறங்கள் அனைத்தும் குப்பை மேடுகளாகி வருகின்றன. ஒருபுறம் தெருநாய்களை கட்டுப்படுத்த தவறிய நிலையில் அவைகளின் விளையாட்டால் குப்பை ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால குப்பை மயமாகி ஊராட்சி நிர்வாகம் செயல்பாட்டில்தான் உள்ளதா என்ற சந்தேகம் தோன்றுகிறது. சமூக நல ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று இதுபற்றி முறையிட்டால் பணியாளர் பற்றாக்குறை, நிதி ஒதுக்கீட்டு பிரச்னை என்கின்றனர்.