மாவட்ட நுலைவாயில் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு !
வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நாமக்கல் மாவட்ட நுலைவாயில் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
By : King 24x7 Angel
Update: 2024-03-18 06:26 GMT
சேலம்-மதுரை தேசிய நொடுஞ்சலையில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை இணைக்கும் பகுதி பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுபாலம். இப்பகுதியில் பரமத்தி வேலூர் காவல்துறை சோதனை சாவடியும் உள்ளது. இதன் அருகே வேலூர் பேரூராட்சி பகுதிகளில் இருந்து சேகரித்து கொண்டு வரும் கழிவு பொருட்கள்,குப்பைகள்,பிளாஸ்டிக் பொருட்கள்,பழைய மெத்தைகள் போன்றவற்றை அப்பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினரால் கொட்டப்படுகிறது. மேலும் வேலூர் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள்,உணவகங்களில் இருந்து கொண்டுவந்து கடைக்காரர்கள் கொட்டப்படும் இலைகள் இதனால் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. பேரூராட்சி நிர்வாகத்தினர் கொட்டப்படும் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் எந்நேரமும் புகைந்து கொண்டே இருப்பதால் சுகாதார சீர்கேடு அதிக அளவில் ஏற்படும் எனவும் தீயிட்டு எரிப்பதன் மூலம் அதிக அளவு புகை வருவதால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என அவ்வழியாக செல்லும் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலூர் பேராட்சி நிவாகத்தால் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் மட்கும் குப்பை,மட்கா குப்பைகளை பிரித்து எடுக்க தனியாக குப்பை கிடங்கு பரமத்து வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தால் சேகரிப்படும் இந்த குப்பைகளை அங்கு எடுத்து சென்று பிரித்து எடுத்து சுகாதார சீர்கேடு ஏற்படாமல் பதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,இறைச்சி கடை மற்றும் உணவங்களில் இருந்து கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.