துாய்மை பணியாளர்கள் சமத்துவ பொங்கல் விழா
துாய்மை பணியாளர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 13:49 GMT
சமத்துவ பொங்கல் விழா
காஞ்சிபுரம் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், ஊழியர்கள் சார்பில், ராஜாஜி மார்க்கெட் அருகில் உள்ள சுகாதார பிரிவு எண்.5 அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அப்பகுதி துாய்மை பணியாளர்கள், மாநகராட்சியினர் சேர்ந்து மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டனர்.
சர்க்கரை பொங்கலை பொதுமக்களுக்கு வழங்கினர். அதை தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில், பெண் துாய்மை பணியாளர்கள் நடனமாடி தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்."