நகராட்சியை கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
சங்கரன்கோவில் சம்பளம் வழங்காத நகராட்சியை கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டு பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் 30 க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி சம்பள பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சம்பளத்தை வாங்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மற்றும் துறை சார்ந்த அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதம் நடக்கவாடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.