தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி நகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை‌ வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-25 07:11 GMT

ஆர்ப்பாட்டம் 

நிரந்தர தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கும்‌ ஊதியத்தை ஒப்பந்த தூய்மைப்‌ பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். மாதம் தோறும் 7ம்‌ தேதிக்குள் ஊதியம்‌ வழங்க வேண்டும். நிரந்தர தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஒப்பந்த தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சீருடை, கையுறை, காலுறை உள்ளிட்ட தளவாட பொருட்களை முறையாக‌ வழங்க வேண்டும். நிரந்தர தூய்மைப்‌ பணியாளர்கள்‌ ஓய்வுபெறும்‌ தேதியில்‌ வழங்க வேண்டிய ஓய்வு கால பணப் பயன்களை உரிய காலத்தில்‌ வழங்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பயன்படுத்தப்படும்‌ வாகனங்களை உரிய காலத்தில்‌ பழுது நீக்க பணிகள்‌ செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒப்பந்த தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வார விடுமுறை மற்றும்‌ அரசு விடுமுறைகள்‌ வழங்க வேண்டும். பி.எப்., தொகையை முறையாக செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊட்டி நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி ஊழியர்கள் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.ரவிகுமார், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News