சங்கரநாராயணசாமி கோவில் திருவாதிரை தேரோட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது.
Update: 2023-12-26 04:46 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 9ம் திருநாள் இன்று காலை திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது, இதனை முன்னிட்டு அதிகாலை சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. சங்கரநாராயணசாமி கோவில் முன்யிருந்து தொடங்கிய தேரோட்டம் முக்கிய ரத வீதி வழியாக மீண்டும் கோவில் முன்பு நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.