சங்கரன்கோவில் மூதாட்டிக்கு எம்எல்ஏ நிதியுதவி
சங்கரன்கோவில் மூதாட்டிக்கு எம்எல்ஏ நிதியுதவி வழங்கினார்;
Update: 2024-04-15 01:46 GMT
எம்எல்ஏ நிதியுதவி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரம் திருவேங்கடம் சாலை அருகே வசிக்கும் மூதாட்டி சண்முகவேலு என்பவரின் வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதனை அறிந்த உடன் திமுக தென்காசி வடக்கு மாவட்டம் செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் உடனடியாக சண்முகவேலுவிடம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ்.தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்தனர்.