சங்கராபுரம் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.;
Update: 2024-03-31 06:40 GMT
அலுவலகம் திறப்பு
சங்கராபுரத்தில் தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் துரை வரவேற்றார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் பாப்பாத்தி நடராஜன், தொழிலதிபர் கதிரவன், வழக்கறிஞர்கள் அண்ணாமலை, ஜனார்தனன், பரமகுரு, ரமேஷ்குமார், வி.சி., மாவட்ட செயலாளர் பழனியம்மாள், காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.