மரக்கன்றுகள் நடும் விழா
மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;
Update: 2023-12-22 12:05 GMT
மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வனவர்கள் இந்துமதி, கார்த்திக், ஸ்ரீபல்லவி, கனக வள்ளி, வனக்காவலர் யோகம்பாள் மற்றும் ஆசிரி யர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ,மாண விகள் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் முத்துச்சாமி வரவேற்றார்.ஆசிரியர் பூச்சி நன்றி கூறினார்.