மரக்கன்று நடும் விழா
இயற்கையை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல்லில் இன்று காலை மரக்கன்று நடும் விழா நடந்தது.;
Update: 2024-01-09 08:31 GMT
இயற்கையை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல்லில் இன்று காலை மரக்கன்று நடும் விழா நடந்தது.
இயற்கையை பாதுகாத்திட காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல் நகர் குழுவின் சார்பில் இன்று காலை மரக்கன்று நடும் விழா R.M.காலனி 13வது கிராஸில் உள்ள பூங்காவில் நகர செயலாளர் M.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. இயற்கை சூழலியலாளர், எழுத்தாளர் கோவை சதாசிவம் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் ச.கணேசன், என மேலும் பலர் பங்கேற்றனர்.