நாமக்கல் பிஜிபி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு
நாமக்கல் பிஜிபி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை,வேட்டாம்பாடி பிஜிபி வேளாண்மை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுப்புற சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி கலாநிதி, துணை வனத்துறை பாதுகாப்பாளர் சனாவாஸ்கான், பிஜிபி கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.ஒ கோபால் மற்றும் துணை முதல்வர் சீனிவாசன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று 500 மரக்கன்றுகளை நடும் விழாவை தொடங்கி வைத்தனர்.
பிறகு நாமக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி கலாநிதி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்.... மாணவர்களுக்கு இன்றைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், மரம் நடும் விழாவின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கினார். காலை 11 மணி அளவில் தொடங்கிய மரக்கன்று விழா மாலை 6 மணி அளவில் முடிவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மரக்கன்றுகளின் பராமரிப்பு பணியை ஆர்வத்துடன் செய்து முடித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சந்தியா, முனைவர் குறளரசன் ஆகியோர் செய்திருந்தனர்.