குமரியில் மரக்கன்றுகள் நடும் விழா - அமைச்சர் துவக்கினார்
குமரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
Update: 2024-06-03 11:28 GMT
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் அமைச்சர் மனோ தங்க ராஜ் அவர்கள் முதல் மரக்கன்றை V J ஹெல்த் கேர் ஜஸ்டின் என்பவரிடம் மரக்கன்று வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.