அரவிந்தர் மீரா பிரபஞ்ச பள்ளியின் "சாரங்" 8ம் ஆண்டு விழா
அரவிந்தர் மீரா பிரபஞ்ச பள்ளியின் "சாரங்" 8ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள ஶ்ரீ அரவிந்தர் மீரா பிரபஞ்ச பள்ளியின் "சாரங்" 8ம் ஆண்டு விழா ஶ்ரீ அரவிந்தர் மீரா பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பாலர்(KG) வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவின் தொடக்கமாக பள்ளி சேர்மன் Dr.சந்திரன் மற்றும் பள்ளி இயக்குநர் M.C.அபிலாஷ்,நிக்கிஃபுளோராஅபிலாஷ்,மற்றும் சிறப்பு விருந்தினர் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தான் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
இதனைத் தொடர்ந்து விழா இனிதே ஆரம்பமானது. பிறகு, பள்ளியின் சேர்மன் மற்றும் இயக்குநர் ஆகியோர் பெற்றோர்களை வரவேற்று மாணவர்களுக்கு கல்வி மற்றும் பன்முகத்திறனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உரை நிகழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து சிறந்த அன்னைக்கான " ஜான்சி ராணி" விருது ,அறிவுத் திறமை,அனைத்துத் துறையிலும் முதன்மை பெற்ற மாணவச் செல்வங்கள்,தேசிய,மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் வெகு விமர்ச்சியாகவும், சித்திரை திருவிழா போன்று கோலாகலமாகவும் நடைபெற்றது.
இவ்வாண்டுவிழா மாணவர்களுக்கு சமூகநல சமத்துவம், கலாச்சாரம், பண்பாடு, பன்முகத்திறன் மற்றும் குழுச் செயல்பாடு ஆகியவற்றை உணர்த்தும் விதமாக, இவ்விழா இனிதே நிறைவுற்றது.