சாத்தக்கிழவி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

நத்தம் அருகேயுள்ள வேலாயுதம்பட்டியில் அமைந்துள்ள சாத்தக்கிழவி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

Update: 2024-06-21 06:01 GMT

குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள வேலாயுதம்பட்டியில் அமைந்துள்ள சாத்தக்கிழவி அம்மன், பட்டானி சாமி,சின்ன கருப்புசுவாமி, பெரியசுவாமி, ஆண்டிச்சாமி, அழகுநாச்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, தன பூஜை நவகிரக ஹோமம் முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் தீபாராதனையை தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர்கோவில் புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து கோயிலைச்சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு , சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News