ஆட்சீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

Update: 2023-12-21 05:55 GMT

சனி பெயர்ச்சி 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சி கணபதி யாகம், சனீஸ்வர பகவான் பரிகார யாகம் உள்ளிட்ட யாக நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த யாக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது பெயர் ராசி ஆகியவற்றை கூறி அர்ச்சனை செய்தனர். இதனைத் தொடர்ந்து யாக பூஜையில்,மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சனிப்பெயர்ச்சியின் போது சனி பகவானுக்கு கலச அபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை வணங்கி எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
Tags:    

Similar News