சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் - பக்தர்கள் பால் குட ஊர்வலம்

சாயல்குடி சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் தூக்கி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-05-29 04:59 GMT

பால்குட ஊர்வலம் 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவுக்கு உட்பட்டது நரிப்பையூர் ஊராட்சி. இங்கு கல் தேர் ஓட்டிய காரண மறவர்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா உறவின்முறை தலைவர் கு.நா.அ.சுப்பையா தேவர் தலைமையில் காப்புக்கட்டுதலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிகாலையில் தீர்த்தக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் பால்குடங்களை தலையில் தாங்கியவாரு நகர்வலம் வந்து கோயிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கினர். இதனையடுத்து புரவி எடுப்பு என்னும் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் குதிரை உள்ளிட்ட உருவ சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து உறவின்முறை கட்டிட வளாகத்தில் வைத்து கண் திறந்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து பொது அன்னதானம் நடைபெற்றது.

Similar News