சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்த பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது

சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது

Update: 2023-11-27 12:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் முழு கொள்ளவை எட்டியதை அடுத்து விவசாயிகள் பாசனத்திற்காக நீர் தேக்கத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உருப்பினர் தனுஸ் M குமார் மற்றும் ஆட்சியர் நேர்முக உதவியாளர் நாச்சியார் விவசாயப் பிரிவு.பொதுப்பணி துறை செயற்பொறியாளர் தனலட்சுமி உதவி செயற்பொறியாளர் பொன்ராஜ் ஆகியோர் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்தை பாசன விவசாயத்திற்காக திறந்து வைத்தனர். இன்று முதல் 7 நாட்களுக்கு நீர் திறக்கப்படுவதால் பதினோரு கண்மாய்கள் உட்பட்ட சுமார் 3,130 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன பயன்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News