பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை கண்டாங்கிபட்டி அருகே மெளண்ட் லிட்ரா பள்ளியில் 8ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-05-02 03:58 GMT

சிவகங்கை கண்டாங்கிபட்டி அருகே மெளண்ட் லிட்ரா பள்ளியில் 8ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.  

சிவகங்கை கண்டாங்கிபட்டி அருகே இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் 8ஆவது ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஆர்வம் IAS அகாடமியின் நிறுவனர், கல்வியாளர் சிபிகுமரன், பேராவூரணி மெகா பவுண்டேஷன் நிறுவனர் நிமல் ராகவன் மற்றும் திருப்பூர் அக்ஷயா அறக்கட்டளையின் பொருளாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவிற்கு ஶ்ரீமீனாக்ஷி கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர்.பால.கார்த்திகேயன் தலைமை ஏற்றார். ஏழாம் வகுப்பு மாணவி இனியா வரவேற்புரை நல்கினார்.

 இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வருடம் முழுவதும் 95% க்கும் மேலான மதிப்பெண்கள் பெற்று, பள்ளியின் 100% கல்விக் கட்டணச் சலுகை தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் ஒலிம்பியாட் போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் மாவட்ட, மாநில மற்றும் சர்வேதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளியின் விளையாட்டு கல்விக் கட்டணச் சலுகை பெறத் தகுதி பெற்ற மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவச் செல்வங்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்து மகிழ்ந்தனர். விழாவில் வகுப்பு வாரியாக அனைத்து மாணவர்களும் நடனம், நாட்டியம், நாடகம் மற்றும் இசை வாயிலாக தங்களது கலைத்திறமைகளை வெளிக்காட்டினர்.

Tags:    

Similar News