பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்

Update: 2024-02-16 06:33 GMT

தூக்கிட்டு தற்கொலை!

சாணார்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சில்வார்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி. இவரது 14 வயது மகள் இவர் கோபால் பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததால் மனமுடைந்த மாணவி வியாழக்கிழமை காலை எட்டு முப்பது மணி அளவில் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News