பள்ளி மாணவி பலாத்காரம்

மணவாளக்குறிச்சியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை.

Update: 2024-01-31 05:24 GMT
கைதான  தொழிலாளி
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இளந்தோப்புவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (28)  கடந்த 29-12-2021 அன்று அதே பகுதி 7-ம் வகுப்பு  மாணவி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கிருஷ்னகுமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார் . தொடர்ந்து பலமுறை  மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே  கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.  அடிக்கடி  அத்துமீறி  பலாத்காரம் செய்ததால்  மாணவி கர்ப்பம் அடைந்தார். மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றோர் இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது கிருஷ்ணகுமார் மிரட்டி பலாத்காரம் செய்த விஷயத்தை மாணவி தன் பெற்றோரிடம் கூறி அழுதார். பெற்றோர் சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.     அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணகுமாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
Tags:    

Similar News