பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி

பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-10-29 04:45 GMT

அறிவியல் கண்காட்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள கோல்டன் கேட்ஸ் தனியார் பள்ளியில், மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி அளவில் அறிவியல் கண்காட்சி அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது,பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்த அறிவியல் கண்காட்சியில், ரோபோடிக், செயற்கைக்கோள், கணித அறிவியல்,விபத்தில்லா சாலை வழிமுறை மற்றும் மண்ணிலா செடிகள் வளர்ப்பு, மேலும் அறிவியல் விளையாட்டு புதிர்கள் புகை பிடித்தால் ஏற்படும் விளைவு அதற்கான விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில், 80க்கும் மேற்பட்ட படைப்புகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தினார்கள், இதனை பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர், பார்வையிட்டவர்களுக்கு மாணவர்கள் தங்கள் அறிவியியல் படைப்பு குறித்து விளக்கமளித்து எடுத்துரைத்தனர். இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில் மாணவர்களின் தனித் திறமையை வெளிப்படுத்த இதுபோன்ற அறிவியல் கண்காட்சி நடத்துவது, தங்களது பேச்சு மற்றும் தனி திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.
Tags:    

Similar News