சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2024-06-18 13:33 GMT

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

. பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் பப்ளிக் பள்ளியின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு பேரணி ஜூன் - 18ம் தேதி நடைபெற்றது. வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் துவங்கிய இப் பேரணியை பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, பேரணி ரோவர் வளைவு, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக வந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது, இந்த சைக்கிள் மற்றும் நடை பயண பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும், மரம் வளர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துவதின் நன்மைகள் குறித்தும் கோசமிட்டு இதற்கான, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் சென்றனர்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News